o2

'களவாணி' பட நடிகையின் IAS கனவு .. உதவ முன்வந்த ஜெய்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள், படிக்கக் கூடிய மாணவர்களின் படிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ஜெய் இப்போது முன் வந்துள்ளார்..

Actor Jai helps Kalavani Actress Dreams to become IAS

வெகுவருடங்களுக்கு முன்வந்த திரைப்படம் களவாணி. விமல், ஓவியா, சரண்யா பொன்வண்னன், இளவரசு, திருமுருகன் மற்றும் பலரது நடிப்பில் சற்குணம் இயக்கிய இந்த படத்தில் விமலுக்கு தங்கையாக படு சுட்டியாக நடித்தவர் மனிஷா பிரியதர்ஷினி.

Also Read | உலகின் அழகான முகம் கொண்ட பெண்ணாக ’ஆம்பர் ஹெர்ட்’… ஆய்வு முடிவை வெளியிட்ட மருத்துவர்

இவர் தற்போது சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நடித்து வருகிறார். நடிக்க வந்தாலும் தன்னுடைய படிப்பின் மீதான கவனத்தை விடாமல், அதை தொடர்ந்து வரும் மனிஷா, படிப்பிலும் சிறந்து விளங்குகிறார்.  இவர் தற்போது சட்ட படிப்பு LLB இறுதி ஆண்டு படிக்கிறார். அதில் நல்ல மதிப்பெண்களும் வாங்கியுள்ளார்.

அவரது தாயின் கனவு என்னவென்றால், தன் மகள் மனிஷாவை கலெக்டர் ஆக்க வேண்டும் என்பதுதான். தற்போது , UPSC, IAS முதலான மத்திய மாநில சிவில் சர்வீஸ் ஆரம்ப கட்ட படிப்பிற்கு தனக்கு புத்தகங்கள்  வாங்கி தருமாறு நடிகர் ஜெய் இடம் உதவி கேட்டுள்ளார் மனிஷா.

Actor Jai helps Kalavani Actress Dreams to become IAS

அவரும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் கோச்சிங் படிப்புக்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் வாங்கி கொடுத்து நன்கு படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்றும், மேற்கொண்டு எல்லா உதவிகளையும் செய்வேன் என்றும் கூறி வாழ்த்தியுள்ளர். இதன் நிமித்தமாக நடிகர் ஜெய்யை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார் நடிகை மனிஷா பிரியதர்ஷினி.

நடிகர் ஜெய் சிவ சிவா படத்துக்கு இசையமைத்திருந்தார். இதேபோல் ஜெய் நடிப்பில், அடுத்ததாக பட்டாம்பூச்சி எனும் திரைப்படம் ஜூன் 24-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. 

Actor Jai helps Kalavani Actress Dreams to become IAS

1980-களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதையான இந்த படத்தை அவ்னி டெலி மீடியா சார்பாக குஷ்பூ சுந்தர் தயாரிக்க, சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்க, முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ளார். ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பத்ரி.  கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியாகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

Also Read | Vijay Sir-ட்ட கதை சொன்னேன்.. "ஒரு Script எழுத இவ்ளோ நாள் ஆகுமானு கேட்டார்" - RJ Balaji

தொடர்புடைய இணைப்புகள்

Actor Jai helps Kalavani Actress Dreams to become IAS

People looking for online information on Jai, Kalavaani, Pattampoochi will find this news story useful.