o2

உலகின் அழகான முகம் கொண்ட பெண்ணாக ’ஆம்பர் ஹெர்ட்’… ஆய்வு முடிவை வெளியிட்ட மருத்துவர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகையான ஆம்பர் ஹெர்ட் சமீபத்தில் ஜானி டெப்புடனான விவாகரத்து காரணமாக சர்ச்சைகளில் சிக்கினார்.

Amber heard has the perfect face in the world research by doctor

Also Read | ”உன்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும்… ” கமலுக்கு நன்றி தெரிவித்து இமான் நெகிழ்ச்சி

ஆம்பர் ஹெர்ட்

அக்வாமேன் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் ஆம்பர் ஹெர்ட். இவர் கடந்த  2015 ஆம் ஆண்டு பிரபல நடிகரான ஜானி டெப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டா. ஆனால், அடுத்த 15 மாதங்களில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு ஆம்பர் ஹெர்ட் எழுதிய ஒரு கட்டுரையில் குடும்ப வன்முறையால் தான் பாதிக்கப்பட்டதாகவும், குடும்பத்தில் பெண்களுக்கு நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும் ஆம்பர் எழுதியிருந்தார். இந்த கட்டுரையில் ஜானி டெப்பின் பெயரை ஆம்பர் குறிப்பிடவில்லை. ஆனாலும், இந்தக் கட்டுரை வெளியான சில நாட்களில் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தின் 6-வது பாகத்திலிருந்து ஜானி டெப் நீக்கப்பட்டது ஹாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Amber heard has the perfect face in the world research by doctor

சர்ச்சைகள்

இந்நிலையில், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஆம்பர் ஹெர்ட் மீது வழக்கு தொடர்ந்தார் ஜானி டெப். உலகம் முழுவதிலும் இருந்து பலராலும் நேரலையாக பார்க்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை முடிவி ஜானி டெப்பிற்கு ஆதரவாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதன்மூலம், ஜானி டெப்பிற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை இழப்பீடாக வழங்கும்படி ஆம்பர் ஹெர்ட்டுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணையில் பல குளறுபடிகளை மேற்கொண்ட ஆம்பர் பல சர்ச்சைகளிலும் சிக்கினார்.

இந்நிலையில் இப்போது அவர் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.

Amber heard has the perfect face in the world research by doctor

உலகின் அழகான முகம்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜூலியன் டி சில்வாவின் சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்தின் படி ஆம்பர் ஹெர்டின் முகம் உலகின் அழகான பெண் முகமாக உள்ளது எனக் கூறியுள்ளார். பண்டைய கிரேக்க கால கோல்டன் ரேஷியோ எனும் முக அமைப்பு சாஸ்திரத்தின் படி ஆம்பரின் முகம்  91.85 சதவீதம் வரை பொருத்தமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வில் அவர் டிஜிட்டல் ஃபேஷியல் மேப்பிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கணக்கீடு செய்துள்ளார். இதே போல சிறந்த ஆண் முகமாக ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சனின் முகத்தை அவர் தெரிவித்துள்ளார்.

Also Read | வெங்கட் பிரபு - நாகசைதன்யா படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்கள்.. 'அதிரடி' அப்டேட்

Amber heard has the perfect face in the world research by doctor

People looking for online information on Amber Heard, Amber heard has the perfect face, Johnny Depp will find this news story useful.