o2

சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து ‘பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சியில் பிரபல நடிகர்… Netflix வெளியிட்ட Update

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் பிரபல சர்வைவல் நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் உடன் கலந்துகொள்ள உள்ளார்.

Ranveer singh in bear grylls Netflix announcement

Also Read | உலகின் அழகான முகம் கொண்ட பெண்ணாக ’ஆம்பர் ஹெர்ட்’… ஆய்வு முடிவை வெளியிட்ட மருத்துவர்

பியர் கிரில்ஸ்

டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலில் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ என்னும் நிகழ்ச்சி ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. இதில் அடர்ந்த காடுகளில் சிக்கிக்கொண்டால் உயிர்பிழைத்து அங்கிருந்து எவ்வாறு தப்பித்து வர வேண்டும் என பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது சில உலகப் பிரபலங்களும் அவரோடு சேர்ந்து பயணிப்பார்கள். இதுவரை அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த எபிசோட்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.

Ranveer singh in bear grylls Netflix announcement

முன்னதாக பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு ஒன்றில் புதிய நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்புக்காக பியர் கிரில்ஸ் சென்றபோது, அந்த தீவில் கொடிய விஷதன்மையுடைய தேனீ ஒன்று அவரின் முகத்தில் தாக்கியதாக தகவல் வெளியானது. தேனீயால் தாக்கப்பட்டு முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு வீங்கியுள்ள பியர் கிரில்ஸின் புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து சிகிச்சைக்குப் பின்னர் அவர் இயல்புநிலைக்கு திரும்பினார்.

Ranveer singh in bear grylls Netflix announcement

ரண்வீர் சிங்

இதையடுத்து இப்போது இவரின் அடுத்த சாகச எபிசோடில் பிரபல பாலிவுட் நடிகரான ரண்வீர் சிங் கலந்துகொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சி Exclusive ஆக நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை இந்த நிகழ்ச்சியின் டீசர் வெளியாகும் என நெட்பிளிக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இது சம்மந்தமான போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Also Read | ”உன்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும்… ” கமலுக்கு நன்றி தெரிவித்து இமான் நெகிழ்ச்சி

தொடர்புடைய இணைப்புகள்

Ranveer singh in bear grylls Netflix announcement

People looking for online information on Bear Grylls, Discovery Bear Grylls, Netflix announcement, Ranveer Singh will find this news story useful.