பிரபல நடிகர் இர்ஃபான் கான் மரணம் - சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இவ்வுலகை விட்டு மறைந்த செய்தி ரசிகர்களை பெரிதும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. நடிகர் இர்ஃபான் கான் கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலகக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular Bollywood actor Irfan Khan Passes Away | பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் மரணம்

பாலிவுட், ஹாலிவுட் என தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் நடிகர் இர்ஃபான் கான். அவர் நடிப்பில் வெளியான ஹாலிவுட் படங்களான 'ஸ்லம்டாக் மில்லியனர்', 'லைஃப் ஆஃப் பை', 'ஜூராஸிக் பார்க்', 'அமேசிங் ஸ்பைடர் மேன்' ஆகியவை மூலம் உலக அளவில் மிகவும் பரீட்சையமானவர்.

மேலும் பாலிவுட் படங்களான 'லஞ்ச் பாக்ஸ்', 'பான் சிங்', 'தல்வார்', 'சலாம் பாம்பே' உள்ளிட்டவற்றில் தனது தனித்துவமான நடிப்பால் அவர் என்றும் நினைவு கூறப்படுவார். நடிகர் இர்ஃபான் கானின் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Entertainment sub editor

Tags : Irfan Khan