பாபி சிம்ஹா மனைவி வெளியிட்ட அழகான போட்டோ.! - கணவர் மற்றும் குழந்தைகளுடன் செம ஜாலி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பாபி சிம்ஹாவின் மனைவி வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

பாபி சிம்ஹா, மனைவி மற்றும் குழந்தைகளுடன் க்யூட் புகைப்படம் | actor bobby simha's family pic with wife and kids goes viral

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் பாபி சிம்ஹா. ஜிகர்தண்டா திரைப்படத்தில் இவரின் அசால்ட் சேது கதாப்பாத்திரம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதுமட்டுமின்றி பாபி சிம்ஹா தெலுங்கு திரைப்படங்களிலும் வில்லனாக கலக்கி வருகிறார். இதனிடையே இவர் நடிகை ரேஷ்மி மேனனை திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் நடிகர் பாபி சிம்ஹாவின் மனைவி ரேஷ்மி மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய அவர், கணவர் பாபி சிம்ஹா மற்றும் இரண்டு குழந்தைகளுடனும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ''கை நிறைந்து, வயிறு நிறைந்து, மனதும் நிறைந்துவிட்டது'' என தனது பிறந்தநாள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் ரேஷ்மி மேனன். பாபி சிம்ஹாவின் இந்த குடும்ப புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஹிட் அடித்துள்ளது. 

 

 

பாபி சிம்ஹா, மனைவி மற்றும் குழந்தைகளுடன் க்யூட் புகைப்படம் | actor bobby simha's family pic with wife and kids goes viral

People looking for online information on Bobby Simha, Bobby Simha Family, Reshmi Menon will find this news story useful.