மறைந்த இயக்குநர் இராம நாராயணன் அவர்களால் தொடங்கப்பட்டது தேனாண்டாள் நிறுவனம். இந்த நிறுவனம் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான 'மெர்சல்', சந்தானத்தின் 'தில்லுக்கு துட்டு' , சுந்தர்.சியின் 'அரண்மனை' உள்ளிட்ட படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறது.

இந்த நிறுவனம் தற்போது லிப்ரா புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படத்தை வெளியிடவுள்ளது. பாபி சிம்ஹா நடித்துள்ள 'வல்லவனுக்கும் வல்லவன்' படம் தான் அது.
இந்த படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ஷிவதா நடிக்க, இந்த படத்தை விஜய் தேசிங்கு இயக்குகிறார். சென்சாரால் யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.