போட்டியில் வெல்பவர்களுக்கு பரிசாக தங்க சங்கிலி அறிவித்த 'V 1' படக்குழு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 12, 2019 07:46 PM
ராம் அருண் காஸ்ட்ரோ, விஷ்ணு பிரியா ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்து உருவாகியுள்ள படம் 'வி 1'. இன்வஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தை பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா மூமென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக ட.சிந்தன் இப்படத்தை வெளியிடுகிறார். பாவெல் நவகீதன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிருஷ்ணா சேகர் T.S, ரோனி ரப்ஹெல் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை பிரபலப்படுத்தும் விதமாக ரசிகர்களுக்கு படக்குழு ஒரு போட்டியை அறிவித்துள்ளது. அதன் படி போஸ்டர் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிர் வைத்தனர். குழுந்தை பாலியல் விழிப்புணர்வை தூண்டும் வகையில் அந்த போஸ்டரில் 8 எழுத்துக்கள் மறைந்துள்ளது என்றும் அந்த எழுத்துக்களை ஒன்று சேர்த்தால் ஒரு வார்த்தை உருவாகும் என்றும் கூறியிருந்தனர்.
சரியான விடையை தங்கள் டிவிட்டர் அக்கௌண்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும் குலுக்கல் முறையில் வெற்றி பெறுபவருக்கு 8 கிராம் தங்க சங்கிலி அளிக்க படும் என்று கூறியிருந்தனர். விடையை கண்டறிந்த பலர் அந்த சரியான பதிலை அனுப்பிவைத்தனர். "Bad Touch" என்ற பதிலை அனைவரும் டிவிட்டரில் பதிவு செய்ய, அந்த வார்த்தை இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.
மேலும் தங்களது முதல் போஸ்டரிலும் இது போன்ற புதிர் வைத்து குலுக்கல் முறையில் வென்றவருக்கு "வி 1" படக்குழுவினர் ஏ.சி பரிசாக அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.