''வி ஆர் தி பாய்ஸு'' - தனது இரட்டைக் குழந்தைகளின் ஃபோட்டோவை பகிர்ந்த பரத்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 23, 2019 02:14 PM
இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' படம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் பரத். தொடர்ந்து 'காதல்', 'வெயில்' போன்ற படங்களில் தனது யதார்த்த நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தற்போது 'பொட்டு' என்ற படம் அவர் நடிப்பில் வெளியாகியிருந்தது. இந்த படத்தை 'சவுகார்பேட்டை' உள்ளிட்ட படங்களை இயக்கிய வடிவுடையான் இயக்கியிருந்தார். அம்ரேஷ் கணஷ் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.
இதனையடுத்து காளிதாஸ், நடுவன் உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் தனது இரட்டைக் குழந்தகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வி ஆர் தி பாய்ஸு என்று குறிப்பிட்டுள்ளார்.