Reliable Software
www.garudabazaar.com

அச்சு அசல் தல அஜித் போலவே இருக்கும் நபர்.. செம வைரலாகும் வீடியோக்கள்... யார் இவர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வெளிநாட்டில் படத்தின் சேஸிங் காட்சியும் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படம் கடந்த ஜனவரி 14 அன்று ரிலீஸானது. இதனையடுத்து தல ரசிகர்களும் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக வாஞ்சையுடன் காத்திருந்தனர். ஆனால் அப்படி எதுவும் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் பலரும் படக்குழுவினரை டேக் செய்தே அப்டேட் கேட்க ஆரம்பித்து விட்டனர். இன்னும் சிலர் அதற்கு மேலே போய் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர், கிரிக்கெட் வீரர்கள் என யாரைப் பார்த்தாலும் வலிமை அப்டேட் கேட்டு வந்தனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோக்களும் வைரலானது.

Actor ajith look alike person video viral அச்சு அசல் தல அஜித் போலவே இருக்கும் நபர்

வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் விநியோக வேலைகள் தல அஜித்தின் 50வது பிறந்த நாள் தினமான  மே 1 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்அஜீத் குமாரை நடிகர் என்பதை தாண்டி பொதுவாகவே ஒரு நல்ல மனிதர் என்பதால் பலருக்கும் பிடிக்கும். அவரது சிம்பிளான வாழ்க்கை முறையும், அலட்டிக்கொள்ளாமல் ரசிகர்களுடன் உரையாடுவதும் பலரது பேவரைட் குணங்கள். இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் ஒருவர் தல அஜித் போலவே வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். வீடியோக்களில் பார்க்கும் பொழுது அச்சு அசல் அஜித் போலவே இருக்கும் அவரது பெயர் சுதாகர்.  தல டயலாக்குகளை எடுத்து அதற்கு பக்காவாக வாய் அசைக்கிறார். இந்நிலையில் அவரது வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பிகில் பட பிரபலம் இந்திரஜா ரோபோ ஷங்கர் கூட லைக் செய்துள்ளார்.

Tags : Ajith

தொடர்புடைய இணைப்புகள்

Actor ajith look alike person video viral அச்சு அசல் தல அஜித் போலவே இருக்கும் நபர்

People looking for online information on Ajith will find this news story useful.