Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

சிம்புவின் இந்த படமும் ரீ-ரிலீஸ் ஆகிறது! .. அஜித்தின் 'பில்லா' ரீ-ரிலீஸை அடுத்து.. வெளியான தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லாக்டவுனுக்கு பிறகு விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியான நேரத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

After Ajith Billa Simbu Old movie rerelease in theatres

இந்த நிலையில், 2009ல் அஜித் நடித்த பில்லா திரைப்படம் ரசிகர்களுக்காக தற்போது மீண்டும் ரிலீஸ் ஆவதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை கேட்டதுமே அஜித் ரசிகர்கள் உற்சாகமாகிவிட்டனர். வலிமை திரைப்படத்துக்காக ஏங்கி வரும் அஜித் ரசிகர்களுக்கு இந்த செய்தி தற்காலிகமாக நிம்மதி அளித்துள்ளது.

இந்நிலையில் மார்ச் 12-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பில்லா திரைப்படம் மீண்டும் நவீன டிஜிட்டல் முறையில் ரிலீஸ் ஆகிறது. இதனிடையே சிம்பு நடித்த மன்மதன் திரைப்படம் அடுத்த வாரம், அதாவது மார்ச் 19-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று சில திரையரங்குகள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளன.

2004 ஆம் ஆண்டு சிம்பு இரட்டை வேடத்தில் நடித்து,  சிம்பு - முருகன் என இரட்டை இயக்குநர்களால் இயக்கப்பட்ட  ‘மன்மதன்’ திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆவது சிம்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட இந்தத் திரைப்படங்களுமே யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகிய படங்கள் என்பதால் யுவன் ரசிகர்களும் குஷியாகியுள்ளனர்.

ALSO READ: 'வலிமை அப்டேட்' கொடுத்த கலெக்டர்!.. வேற லெவல் ட்வீட்.. சான்ஸே இல்ல!

தொடர்புடைய இணைப்புகள்

After Ajith Billa Simbu Old movie rerelease in theatres

People looking for online information on Ajith Kumar, Billa, Manmadhan, Silambarasan TR, Yuvan Shankar Raja will find this news story useful.