Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

“திரைத்துறை மட்டுமின்றி பல துறையில்..!” - அஜித்துக்கு வந்த வாழ்த்து எங்க இருந்து பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மார்ச் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை சென்னை ரைஃபிள் கிளிப்பின் 6-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி  நடைபெற்றது.

OPS wishing Ajith for winning medals in rifle gun competition

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து சுமார் 900-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த போட்டியினை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன் நடத்தினார். சென்னை ரைஃபிள் கிளப், மதுரை ரைஃபிள் கிளப், கோயம்புத்தூர் ரைஃபிள் கிளப் உட்பட 52 கிளப்கள் இதில் பங்கெடுத்தனர்.  

இந்த நிகழ்வில் 60-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பல்வேறு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடந்தது. இதில் சென்னை ரைஃபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித் வெள்ளி, தங்கம் என 6 பதக்கங்களை வென்றார்.

இதனையொட்டி பலரும் நடிகர் அஜித்துக்கு வாழ்த்துக்களை சொல்லி வரும் நிலையில், “தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி.

அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்!” என்று தமிழகத்தின் துணை முதலைமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

ALSO READ: 6 பதக்கங்களை வென்ற 'தல' அஜித்.. வேகமாக பரவி வரும் வைரல் புகைப்படங்கள்.. முழு விபரம்!

தொடர்புடைய இணைப்புகள்

OPS wishing Ajith for winning medals in rifle gun competition

People looking for online information on Ajith Kumar, OPS, Rifle, Thala Ajith will find this news story useful.