Reliable Software
www.garudabazaar.com

பிக்பாஸின் அடுத்த சீசனில் இந்த சீரியல் ஹீரோவா?... ரசிகர் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். இந்நிலையில் 106 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. கடந்த வருடம் உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வந்த நிலையில் கடுமையான ஊரடங்கினால் பிக்பாஸ் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது. பின்பு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக மீண்டும் திரும்பியது பிக்பாஸ். இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி தடையில்லாமல் நடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், நேர்த்தியான ஒழுங்குமுறைகள் மற்றும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு மிகவும் சிறப்பாக நடத்தி  முடிந்திருக்கிறது பிக்பாஸ் குழு.

Is this popular actor to enter biggboss season 5 பிக்பாஸில் இந்த சீரியல் ஹீரோவா?

இந்நிலையில் இந்த வருடத்திற்கான பிக்பாஸ் வரும் ஜூன் மாதம் துவங்க உள்ளது. இதனையடுத்து பிக்பாஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆட்கள் தேர்வு தற்போது துரிதமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் இந்நிகழ்ச்சியில் அழகான இளம் ஆண் பிரபலங்கள் நிச்சயம் இடம் பெற்று இருப்பார்கள். இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் "பிரியாத வரம் வேண்டும்" என்ற தொடரில் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் விமல் வெங்கடேசன். சன் டிவியில் ஒளிபரப்பான கங்கா சீரியலில் அறிமுகமான இவர், பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்துள்ளார். பிரபல மாடல் மற்றும் நடிகரான இவர் நேற்றைய தினம் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் "நீங்கள் பிக்பாஸ் ஐந்தாம் சீசனுக்கு வருவீர்களா? வாய்ப்பு இருக்கிறதா?"என்று கேட்டதற்கு அவர் பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது "பலரும் என்னிடம் இதை கேட்கிறார்கள். ஆனால் உண்மையை சொல்ல வேண்டும் என்றால், எனக்கு விஜய் டிவியில் யாரையுமே தெரியாது" என்று கூறி மறுத்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Is this popular actor to enter biggboss season 5 பிக்பாஸில் இந்த சீரியல் ஹீரோவா?

People looking for online information on Biggboss, Vijay tv will find this news story useful.