Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

'திரும்பவும் ரிலீஸாகும் பில்லா'.. அஜித் ரசிகர்கள் என்ன செஞ்சிருக்காங்க பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் அஜித், நயன்தாரா, நமீதா, பிரபு, சந்தானம், ரஹ்மான் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த பில்லா திரைப்படம் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

Ajith Fans Viral Cut Out Billa ReRelease அஜித் பில்லா ரீரிலீஸ்

முன்னதாக 1978ம் ஆண்டு ஹிந்தியில் வெளியாகிய பின்னர் 1980ம் ஆண்டு தமிழில் ரஜினி நடிப்பில் பில்லா என்கிற இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. இந்த படங்களின் ரீமேக்காக தான் அஜித்தின் நடிப்பில் தமிழில் மீண்டும் வெளியான பில்லா நல்ல வரவேற்பைப் பெற்றது.

அஜித்துக்கும் வெற்றியை தேடி தந்த இந்த படம் அஜித்தின் அடுத்த லெவல் வெற்றிகளுக்கு அச்சாரமிட்டது. முன்னதாக பல படங்களில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தாலும் பில்லா படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்ததும் குறிப்பாக வில்லனாக நடித்திருந்ததும் பலரிடையே பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. இதனிடையே கடந்த டிசம்பர் 14ம் தேதியுடன் பில்லா படம் வெளியாகி 13 வருடம் நிறைவடைந்ததை அஜித் ரசிகர்கள் #13YearsOfClassyDonBilla என்கிற ஹேஷ்டேகின் கீழ் ட்விட்டரில்  ட்ரெண்டிங் செய்து கொண்டாடினர்.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். உடனடியாக இன்னொரு மகிழ்ச்சி தரும் அறிவிப்பாக பில்லா படம் தமிழகத்தில் மார்ச் 12ம் தேதி ரீரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்பட்டது. வலிமை பட அப்டேட்டுக்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு பில்லா படம் ரிலீஸ் ஆகும் செய்தி மகிழ்ச்சியை அளிக்கவே அப்படம் மார்ச் 12-ஆம் தேதி ரிலீஸ் ஆவதை கொண்டாடும் வகையில் அஜித் ரசிகர்கள் வைத்த பேனர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ALSO READ: பரபரப்பு தலைப்புடன் வெளியான கர்ணன் படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Fans Viral Cut Out Billa ReRelease அஜித் பில்லா ரீரிலீஸ்

People looking for online information on Ajith Kumar, AjithFans, Billa, Release will find this news story useful.