LIGER D Logo Top
www.garudabazaar.com

ஆதி - நிக்கி கல்ராணி திருமணத்தின் 100வது நாள்.. உலகப்புகழ் பெற்ற இடத்தில் கொண்டாடிய ஜோடி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி தங்களது 100வது திருமண நாளை முன்னிட்டு வெளிநாட்டிற்கு இன்பச்சுற்றுலா சென்றுள்ளனர்.

Aadhi Nikki Galrani 100 days of Marriage celebration at Paris Eiffel Tower

Also Read | அருண் விஜய் & ரெஜினா கசன்ட்ரா நடிக்கும் 'பார்டர்'.. பட ரிலீஸ் எப்போ? செம தேதி!

நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி திருமணம் கடந்த மே மாதம் (19.05.2022) கோலாகலமாக நடை பெற்றது.  முன்னதாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி இவர்களுக்கு நிச்சயம் ஆனது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஆதி பினிசெட்டி, தமிழில் ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே போல தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். கடைசியாக, அவரது நடிப்பில் உருவாகி இருந்த 'கிளாப்' திரைப்படம், நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. கடைசியாக இவர் வாரியர் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

Aadhi Nikki Galrani 100 days of Marriage celebration at Paris Eiffel Tower

அதே போல் நடிகை நிக்கி கல்ராணி, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான 'டார்லிங்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தார். பின், கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு 2, மரகத நாணயம், சார்லி சாப்ளின்-2 உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

Aadhi Nikki Galrani 100 days of Marriage celebration at Paris Eiffel Tower

நிக்கி கல்ராணி மற்றும் ஆதி ஆகியோர் இணைந்து, மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தனர்.

Aadhi Nikki Galrani 100 days of Marriage celebration at Paris Eiffel Tower

இந்நிலையில் இவர்களது திருமணத்தின் 100வது நாளை தம்பதியர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இன்பச்சுற்றுலா சென்று கொண்டாடி வருகின்றனர். பாரிஸ் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் அருகில் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை ஆதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "இது 100வது நாள், இன்னும் 25,550 நாட்கள் போக வேண்டி உள்ளது" என நடிகர் ஆதி பதிவிட்டுள்ளார்.

 

Also Read | ஆகஸ்ட் கடைசி வாரம் பிரபல OTT-களில் ரிலீசாகும் முக்கிய திரைப்படங்கள் & வெப்-சீரிஸ்.. முழு தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Aadhi Nikki Galrani 100 days of Marriage celebration at Paris Eiffel Tower

People looking for online information on Aadhi Nikki Galrani 100 days of Marriage celebration, Aadi, Nikki Galrani, Paris Eiffel Tower will find this news story useful.