RRR Others USA
www.garudabazaar.com

ரீல் டூ ரியல் ஜோடி.. 2 வருஷ 'லவ்'.. ஆதி - நிக்கி பகிர்ந்த வைரல் 'Engagement' ஃபோட்டோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி ஆகியோர், நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

aadhi and nikki galrani got engaged upload their pics

தமிழில் அறிமுகம்

பிரபல நடிகரான ஆதி, தமிழில், மிருகம், ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே போல தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். கடைசியாக, அவரது நடிப்பில் உருவாகி இருந்த 'கிளாப்' திரைப்படம், நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது.

டார்லிங் மூலம் தமிழ் என்ட்ரி

இன்னொரு பக்கம், ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகி இருந்த 'டார்லிங்' மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தார் நடிகை நிக்கி கல்ராணி. இதனைத் தொடர்ந்து, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஹரஹர மஹாதேவகி, கலகலப்பு 2, உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

ஆதி - நிக்கி

தமிழ் மட்டுமில்லாமல், கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இதில், நிக்கி கல்ராணி மற்றும் ஆதி ஆகியோர் இணைந்து, மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தனர்.

இதனையடுத்து, கடந்த சில தினங்களாக, நிக்கி மற்றும் ஆதி ஆகியோருக்கு இடையே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது.

aadhi and nikki galrani got engaged upload their pics

நிச்சயதார்த்த புகைப்படங்கள்

இந்நிலையில், அதனை உண்மையாகும் வகையில், தங்களுக்கு நடந்த நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்களை, ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர், தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். கடந்த 24 ஆம் தேதி, தங்களின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்ததாக இருவரும் குறிப்பிட்டுள்ள நிலையில், இருவரின் குடும்பத்தினர் கலந்து கொண்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

aadhi and nikki galrani got engaged upload their pics

இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதல்

அதே போல, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், அவர்கள் காதல் வயப்பட்டிருந்ததாகவும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தற்போது தெரிவித்துள்ளனர். சினிமாவில் ஜோடிகளாக இருந்து, காதலிக்க ஆரம்பித்து, தற்போது நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்துள்ள ஆதி - நிக்கி கல்ராணி இணைக்கு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

aadhi and nikki galrani got engaged upload their pics

People looking for online information on Aadhi, Engagement, Maragatha Naanayam, Nikki - Aadhi, Nikki Galrani, Viral photo will find this news story useful.