www.garudabazaar.com

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடிக்கும் ‘அன்பறிவு’ படத்தின் ரிலீஸ் குறித்த மாஸ் அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரை மற்றும் இசையுலகில் ஹிப் ஹாப் என்கிற வகையிலான இசையை புதிய பரிமாணத்தில் வெளிப்படுத்தி மிகவும் பிரபலமடைந்தவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

hip hop tamizha aadhi sttarring anbarivu popular OTT release

மீசையை முறுக்கு, நான் சிரித்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, திரைப்படங்களை இயக்கவும், தயாரிக்கவும், அவற்றில் நாயகனாக நடித்து இசையமைக்கவும் செய்கிறார். இந்த நிலையில் தற்போது சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான அன்பறிவு திரைப்படத்தில் ஹிப் பாப் தமிழா ஆதி நாயகனாக நடித்து இருக்கிறார்.

hip hop tamizha aadhi sttarring anbarivu popular OTT release

இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில், ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன், நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய் குமார், ஊர்வசி, சங்கீத் கிருஷ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.

hip hop tamizha aadhi sttarring anbarivu popular OTT release

கலக்கலாக வெளியான இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அடுத்து ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ரசிகர்கள் 'அன்பறிவு' திரைப்படம் வெளியாகும் தேதியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தனர்

'அன்பறிவு' படத்தின் ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், எடிட்டராக ப்ரதீப் ராகவ், இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் கதையை ஹிப் ஹாப் ஆதியே எழுதியுள்ளார். முன்னதாக பிரபல விஜய் டிவி சூப்பர் சிங்கர் பாடகர் முத்துச்சிற்பி இந்த படத்துக்காக ஒரு பாடலை பாடிய புகைப்படத்தை ஹிப் ஹாப் தமிழா ஆதி பகிர்ந்திருந்தார்.

hip hop tamizha aadhi sttarring anbarivu popular OTT release

இந்நிலையில் அன்பறிவு திரைப்படம் டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்த வெளியீட்டு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

hip hop tamizha aadhi sttarring anbarivu popular OTT release

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் நடிப்பில் சிவகுமாரின் சபதம் திரைப்படம் கடைசியாக வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

hip hop tamizha aadhi sttarring anbarivu popular OTT release

People looking for online information on Anbarivu, Anbarivu movie, Hip Hop Tamizha Adhi, Hip Hop Tamizha Adhi, Latest cinema news, Latest tamil cinema news, Latest tamil cinema update, Movie release, OTT Release will find this news story useful.