www.garudabazaar.com

இது எப்ப? 8 தோட்டாக்கள், ஜீவி படங்களின் ஹீரோ வெற்றிக்கு கல்யாணம்! வைரலாகும் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் செல்வக்குமார் இயக்கும் 'பம்பர்' படத்தில் வெற்றி ஜோடியாக ஷிவானி நடிக்கிறார்.

8 Thottakkal Jiivi Vetri Actor Vetri Marriage viral photo

நடிகர் வெற்றி.

‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’ உள்ளிட்ட திரைக்கதை எழுத்தில் நன்கு கவனம் செலுத்தப்பட்ட திரைப்படங்களில் தமது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஹீரோவானவர் நடிகர் வெற்றி.

திருமணம்

இவருக்கு தான் தற்போது திருமணம் ஆகியுள்ளது இது தொடர்பான புகைப்படங்களை இயக்குநர் எம்.செல்வகுமார் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

8 Thottakkal Jiivi Vetri Actor Vetri Marriage viral photo

இது தொடர்பான தமது பதிவில், “எங்கள் பம்பர் பட கதாநாயகன் வெற்றிக்கு திருமண நல்வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டு புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

பம்பர் திரைப்படம்

கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட 'பம்பர்' என்கிற இந்த திரைப்படத்தை வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கின்றனர். இப்படத்தை இயக்கும் இயக்குநர் எம்.செல்வக்குமார், இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றியவார் ஆவார்.

ஹீரோயினாக ‘பிக்பாஸ்’ ஷிவானி

இதனிடையே இப்படத்தின் கதாநாயகியாக ‘பிக்பாஸ்’ ஷிவானி இணையக்கூடிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது.  முன்னதாக படத்தை பற்றி பேசிய இயக்குநர் செல்வக்குமார், “கேரள பம்பர் லாட்டரி தான் இப்படத்தின் கதைக்களமாகும். வெற்றி கதாநாயகனாகவும், அதற்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் பெரடியும் நடிக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவிந்த் வசந்தா இசை

மேற்படி இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க, கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதுகிறார். படத்தின் ஒளிப்பதிவை நெடுநல்வாடை, எம்.ஜி.ஆர் மகன், ஆலம்பனா மற்றும் கடமையை செய் ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி கையாள்கிறார். படத்தொகுப்புக்கு மு.காசிவிஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார். 

Also Read: ரயிலில் விழுந்து பலியான இளம் துணை நடிகை.. தெலுங்கு திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!.. என்ன நடந்தது..?

8 Thottakkal Jiivi Vetri Actor Vetri Marriage viral photo

People looking for online information on 8 Thottakkal, Actor Vetri, Actor Vetri Marriage, Jiivi, Vetri will find this news story useful.