Reliable Software
www.garudabazaar.com

இயக்குநர் வெங்கட் பிரபுவின் புதிய படம்.. வெளியானது தெறிக்கவிடும் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் வெங்கட் பிரபுவின் புதிய படம்.. வெளியானது தெறிக்கவிடும் அப்டேட்!

A Venkat Prabhu QUICKIE update on VP10 film வெங்கட் பிரபு

சென்னை 28, மங்காத்தா, கோவா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர் வெங்கட்பிரபு. அண்மையில் காஜல் அகர்வால், வைபவ், அஸ்வின், ஆனந்தி மற்றும் பலரது நடிப்பில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் எனும் வெப் சீரிஸை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இந்த வெப் சீரிஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியானது.

A Venkat Prabhu QUICKIE update on VP10 film வெங்கட் பிரபு

இதனிடையே சிலம்பரசன் டி.ஆர் நடிக்கும் ‘மாநாடு’ படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கி வந்தார். சிலம்பரசனுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷினி , எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி அமரன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். கொரோனா சூழலால் இந்த படத்தின் இதர அறிவிப்புகளை சற்று பொறுத்து வெளியிடுவதான் சரியாக இருக்கும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

A Venkat Prabhu QUICKIE update on VP10 film வெங்கட் பிரபு

இந்நிலையில், தயாரிப்பாளர். T.முருகானந்தத்தின் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 10-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

வெங்கட் பிரபுவின் படங்களுக்கு தலைப்புடன் சேர்த்து ஒரு டேக்லைன் இருக்கும். அதாவது கோவா படத்துக்கு எ வெங்கட் பிரபு ஹாலிடே, மங்காத்தா படத்துக்கு எ வெங்கட் பிரபு கேம் என இந்த பட்டியல் நீளும். இந்நிலையில் வெங்கட் பிரபுவின் 10வது படத்துக்கு எ வெங்கட் பிரபு‘QUICKIE’   என கேப்ஷன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை வெங்கட் பிரபு தமது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ALSO READ: "இப்போ சொல்றேன்!".. மலேஷியா to அம்னீஷியாவில் வைபவ் கேரக்டர் பற்றி வெங்கட் பிரபு வைரல் ட்வீட்!

A Venkat Prabhu QUICKIE update on VP10 film வெங்கட் பிரபு

People looking for online information on Rockfort Entertaintment, Venkat Prabhu, VP10 will find this news story useful.