Reliable Software
www.garudabazaar.com

"இப்போ சொல்றேன்!".. மலேஷியா to அம்னீஷியாவில் வைபவ் கேரக்டர் பற்றி வெங்கட் பிரபு வைரல் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மொழி, பயணம், அபியும் நானும் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் ராதா மோகன்.

venkat prabhu viral compliment for vaibhav Malaysia To Amnesia

ராதா மோகன் இயக்கத்தில் தற்போது Zee5 OTT தளத்தில் நேரடியாக வெளியாகி இருக்கிற திரைப்படம் மலேஷியா to அம்னீஷியா.

வைபவ், வாணி போஜன், எம்எஸ் பாஸ்கர், கருணாகரன் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் Zee5 ஓடிடியில் குடும்ப பார்வையாளர்களை மகிழ்விக்கும் காமெடி படமாக வந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு காட்சியில், வைபவ் பேசும்போது, “என் நண்பர் வெங்கட் பிரபு கூட என்னை வெகுவாக பாராட்டியது இல்லை” என்று கருணாகரனிடம் கூறுவார்.

இதனை குறிப்பிட்டு வெங்கட்பிரபு தமது ட்விட்டர் பக்கத்தில், “இப்போது சொல்றேன் வைபவ்..#MalaysiaToAmnesia படம் செம்ம fun ride!! உனக்குனு டெய்லர் மேட் கேரக்டர் ராதாமோகன் சார் எழுதியிருக்கார்!  படக்குழுவுகு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்! ZEE5-ல் பாருங்கள்!” என்று குறிப்பிட்டிருக்கிறார். வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகரும் தம்பியுமான பிரேம்ஜி அமரன் தான் மலேஷியா to அம்னீஷியா படத்துக்கு இசையமைப்பாளர்.

வெங்கட் பிரபு தற்போது மாநாடு திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கும் நிலையில் ஏற்கனவே காஜல் அகர்வால் நடிப்பில் லைவ் டெலிகாஸ்ட் என்கிற வெப் சீரிஸை இயக்கியிருந்தார். வைபவ், அஷ்வின் மற்றும் பலர் நடித்த இந்த சீரிஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது. அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு  ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் என்கிற  தகவலும் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

venkat prabhu viral compliment for vaibhav Malaysia To Amnesia

People looking for online information on Malaysia to Amnesia, Malaysia to Amnesia Tamil, Vaibhav Reddy, Vani Bhojan, Venkat Prabhu will find this news story useful.