Reliable Software
www.garudabazaar.com

அதிர்ச்சி!! கலைப் பிரபலம் கங்கை அமரன் குடும்பத்தில் நடந்த பெரும் சோகம்! கண்ணீரில் மகன்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் கங்கை அமரன். 

Gangai Amaran wife and venkat prabhu premji mother passes away

இசைஞானி இளையராஜாவின் சகோதரரான இவரது மகன்கள் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரன். பல வெற்றித்திரைப்படங்களையும் வெற்றிப்பாடல்களையும் திரையுலகத்துக்கு தந்தவர் கங்கை அமரன். 

இவரது மகன் வெங்கட் பிரபு சென்னை-28, மங்காத்தா, கோவா பல வெற்றிப்படங்களை இயக்கியதுடன் தற்போது சிம்பு நடிப்பில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இவரது படங்களில் இவரது சகோதரரும் நடிகருமான பிரேம்ஜி அமரன் நடித்து வருகிறார். 

இந்நிலையில் கங்கை அமரனின் மனைவியும், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோரின் தாயாருமான மணிமேகலை (வயது 69) நேற்றிரவு உடல்நல குறைவால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காலமானார். இவரது மறைவால் கங்கை அமரனின் குடும்பம் சோகத்தை அனுஷ்டிக்கிறது. திரைத்துறையினர் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். 

ALSO READ: அடுத்த அதிர்ச்சி!! பிரபல சினிமா, சீரியல் நடிகரின் மரணம்.. உருகிய நடிகர்!

Gangai Amaran wife and venkat prabhu premji mother passes away

People looking for online information on Gangai amaran, Premji Amaran, Venkat Prabhu will find this news story useful.