Reliable Software
www.garudabazaar.com

போட்றா வெடிய!! விஜய் நடிக்கும் #Thalapathy66 படத்தின் இயக்குநர் முடிவு! குஷியில் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த விஜய், இந்த திரைப்படத்தின் மாபெரும்

Vijay Thalapathy66 will be directed by Vamshi Paidipally

வெற்றிக்குப் பிறகு நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தமது அடுத்த திரைப்படமான தளபதி 65 திரைப்படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார். இந்நிலையில் தளபதி விஜயை வைத்து தளபதி 65 படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். முன்னதாக, தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்த கையோடு இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகர் விஜய் ஜார்ஜியா சென்றார். ஜார்ஜியாவில் இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இனிதே நடந்துமுடிந்தது.

Vijay Thalapathy66 will be directed by Vamshi Paidipally

இந்த நிலையில் தற்போது கொரோனா அதிகமாக இருப்பதால் கொரோனா படிப்படியாக குறைந்த பின்னர் சென்னையில் இந்த படத்தின் இரண்டாம்  கட்ட படப்பிடிப்பு நடத்துவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் நடிக்கப் போகும் தளபதி 66 திரைப்படத்தில் யாருடன் இணையப் போகிறார் என்கிற கேள்வி ரசிகர்களிடையே பொதுவாக எழுந்திருந்தது.

Vijay Thalapathy66 will be directed by Vamshi Paidipally

இந்த நிலையில் அந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. ஆம் தளபதி 66 திரைப்படத்தினை யார் இயக்கப் போகிறார் என்பது தற்போது உறுதியாகி இருக்கிறது. நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி66 திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்குவதாக தற்போது தகவல்கள் உறுதியாக இருக்கின்றன.

Vijay Thalapathy66 will be directed by Vamshi Paidipally

அண்மையில் பிரபல பேட்டி ஒன்றில் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் வம்சி பைடிபல்லி. இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தையும் தில் ராஜு தான் தயாரிக்கிறார்.  இந்நிலையில் இவர் தயாரிக்கவுள்ள தளபதி 66 படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொரோனா குறைந்த பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் என்றும் தெரிகிறது. இதனால் தளபதி ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். 

Vijay Thalapathy66 will be directed by Vamshi Paidipally

இயக்குநர் வம்சி பைடிபல்லி 2016ல் கார்த்தி, நாகார்ஜூனா நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியான தோழா, 2019-ஆம் ஆண்டு மகேஷ் பாபு நடிப்பிலான மகரிஷி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

ALSO READ: “மரகத நாணயம் அடுத்த பார்ட் வருதா?”.. இயக்குநரே வெளியிட்ட மரண மாஸ் அப்டேட்!

Vijay Thalapathy66 will be directed by Vamshi Paidipally

People looking for online information on தளபதி66, விஜய், Thalapathy65, Thalapathy66, ThalapathyVijay, Trending, Vijay will find this news story useful.