உலகநயாகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோ மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதையடுத்து, முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பானது. இரு சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிய நிலையில், மூன்றாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சி வரும் ஜூன்.23ம் தேது இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், இந்நிகழ்ச்சிக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்தியன் பிராட்காஸ்ட் ஃபவுண்டேசனின் (IBF) தணிக்கை சான்று பெறாமல் ஒளிபரப்பக் கூடாது என வழக்கறிஞர் சுதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இளைஞர்கள், பார்வையாளர்களை கவரும் வகையில் கவர்ச்சி உடை, இரட்டை அர்த்த வசனம் உள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.