‘கனா’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் டிவி பிரபலம் ரியோ ராஜ் நாயகனாக நடித்துள்ளார். மேலும், ஷிரின் காஞ்வாலா, ராதாரவி, ஆர்.ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷபிர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதனை தனது ஸ்டைலில் கலாய்க்கும் விதமாக நடிகர் ரியோ ராஜ், ‘கண்டிப்பா அடிக்கடி போடுவோம். சிடி ஸ்கிராட்ச் ஆகுற வரைக்கும் போட்டுக்கிட்டே இருப்போம்’ என ட்வீட்டியுள்ளார்.
காமெடி கலந்த அரசியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகிறது.
Kandippa Adikkadi Poduvom 😁😁 😁😁 😁 @vijaytelevision @SKProdOffl
CD scratch agara varikkum pottukkitte iruppom 😜😜😜#NNORwithVIJAYTV
— Rio raj (@rio_raj) June 13, 2019