நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் இந்த அணியின் தலைவருக்கு கமல்ஹாசன் வாழ்த்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற ஜூன் 23 ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையேற்று நடத்தவிருக்கிறார்.

Kamal Haasan wishes to Nasser for South Indian Artists Association Election

இந்த தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினர் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். தலைவர் பதவிக்கு நாசர்,  பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால் துணைத் தலைவர் பதவிக்கு பூச்சி முருகன் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு கோவை சரளா, மனோபாலா , குஷ்பு உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

மேலும் இந்தத் தேர்தலில் பாண்டவர் அணிக்கு எதிராக இம்முறை நடிகர் சங்கத் தேர்தலில் இயக்குநரும் நடிகருமான கே. பாக்கியராஜ் தலைமையிலான ஓர் அணி களமிறங்குகிறது. இதில் தலைவர் பதவிக்கு கே.பாக்கியராஜும் , பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும் மற்றும் உதயா குட்டி பத்மினி ஆகியோர் துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிட உள்ளனர்.

இந்நிலையில் பாண்டவர் அணி சார்பாக நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நாசருக்கு நடிகர் கமல்ஹாசன் முன்மொழிந்து வாழ்த்தியுள்ளார்.