“அவரின் ஸ்க்ரிப்டுகள் என்னை வியக்க வைத்ததுடன் இன்ஸ்பையர் செய்தன" -கமல் ஹாஸன் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகரும், நாடக ஆசிரியரும், இயக்குநருமான கிரிஷ் கர்னாட் மறைவு குறித்து அறிந்து கமல் ஹாஸன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Actor Kamal Haasan confessed that Girish Karnad's works had both awed and inspired him.

பிரபல நடிகரும், நாடக ஆசிரியரும், இயக்குநருமான கிரிஷ் கர்னாட் பெங்களூரில் இன்று காலமானார். அவருக்கு வயது 81. அவரின் மறைவு செய்தி குறித்து அறிந்த திரையுலக பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாஸனும் கிரிஷ் கர்னாட் பற்றி ட்வீட் செய்துள்ளார்.

மிஸ்டர் கிரிஷ் கர்னாடின் ஸ்க்ரிப்டுகள் என்னை வியக்க வைத்ததுடன் இன்ஸ்பையர் செய்தன. தன்னை பார்த்து இன்ஸ்பையரான எழுத்தாளர்களான பல ரசிகர்களை விட்டுச் சென்றுள்ளார். அவர்களின் பணியால் கர்னாடின் இழப்பு கொஞ்சம் தாங்கும்படி இருக்கும் என்று கமல் ஹாஸன் ட்வீட் செய்துள்ளார்