www.garudabazaar.com

அதர்வா - ராஜ்கிரண் நடிக்கும் 'பட்டத்து அரசன்' .. தஞ்சையை மையமாக கொண்ட கதையா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பலதரப்பட்ட வித்தியாசமான கருப்பொருள்கள் மற்றும் கதைக்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதன் மூலம் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது உலகளவில் தொடர்ந்து தன்னுடைய கவனத்தை நிலைநாட்டி வரக்கூடிய லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அடுத்து தன்னுடைய புதிய படமான அதர்வா நடிப்பில் ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்தை அறிவித்துள்ளது.

Atharvaa Murali RajKiran starrer Pattathu Arasan First Look

Also Read | வித்தியாசமான லுக்கில் RJ பாலாஜி.. லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 1st லுக் போஸ்டர்! முழு விவரம்

’சண்டிவீரன்’ படத்திற்குப் பிறகு அதர்வா முரளி, இந்தப் படத்தின் மூலம்  இயக்குநர் சற்குணத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறார்.

ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய அடுத்த உயரத்தை அடைகிறர் அதர்வா முரளி. அந்த வகையில் அவருடைய சமீபத்திய ஆக்‌ஷன் திரைப்படமான ’ட்ரிகர்’ மற்றும் அவருடைய அடுத்தடுத்தப் படங்கள் வணிக வர்த்தகத்தில் நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்திருக்கிறது.

நடிகை ஆஷிகா ரங்கநாத் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே. சுரேஷ், ராஜ் அய்யப்பா, ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி, பால சரவணன், ஜி.எம். குமார், துரை சுதாகர், கன்னட நடிகர் ரவி காளே, தெலுங்கு நடிகர் சத்ரு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Atharvaa Murali RajKiran starrer Pattathu Arasan First Look

‘பட்டத்து அரசன்’ திரைப்படம் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றுப்படுகை மற்றும் ஆடு பண்ணை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.  அனைத்து வயதினருக்கும் பிடித்த வகையில் குடும்பங்கள் பார்க்கும் வகையில் எண்டர்டெயின்மெண்ட்டான கதையாக நிச்சயம் இது இருக்கும். 

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், ‘உஸ்தாத் ஹோட்டல்’ புகழ் லோகநாதன் ஸ்ரீனிவாஸ் ஒளிப்பதிவில், ராஜா முகமது எடிட்டிங்கில், ஆண்டனியின் கலை இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷனின் தலைமை G.K.M. தமிழ்க்குமரன்  மேற்பார்வையில் இந்த படம் உருவாகி வருகிறது.

Atharvaa Murali RajKiran starrer Pattathu Arasan First Look

இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகர் ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "இறை அருளால், தஞ்சை மாவட்டத்தில் வாழ்ந்த, கல்வியறிவு கிடைக்கப்பெறாத, ஒரு பாமர கபடி விளையாட்டு வீரரின், வாழ்க்கை, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அந்த  கதாபாத்திரத்தில்

நான் நடித்திருக்கும் திரைப்படம். வெகு விரைவில் வெளியாகவிருக்கிறது.இதன் வெற்றிக்கு, உங்கள் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டியவனாய்..." என கூறி படத்தின் முதல் லுக் போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

Also Read | மீண்டும் உண்மைக் கதை.. தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனரின் அடுத்த படம்.. 11 மொழிகளில் ரிலீஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Atharvaa Murali RajKiran starrer Pattathu Arasan First Look

People looking for online information on Atharvaa, Atharvaa Murali, Pattathu Arasan, Pattathu Arasan First Look will find this news story useful.