கொரோனா : 58 பேருடன் பாலைவனத்தில் சிக்கி தவிக்கும், நடிகர் பிருத்திவி ராஜ்... மனைவி உருக்கம்..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்திவி ராஜ். இவர் தனது அடுத்த படமான 'ஆடுஜீவிதம்' படப்பிடிப்பில் இருந்தார். இந்த ஷூட்டிங் ஜோர்டான் நாட்டின் பாலைவனத்தில் நடைபெற்று வந்தது. கொரோனா காரணமாக போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில், 58 பேர் கொண்ட படக்குழு தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறது. இது பற்றி நடிகர் பிருத்திவி ராஜ் சமீபத்தில் ஒரு நீண்ட பதிவு இட்டிருந்தார். மேலும் உணவுக்கும் பஞ்சமாக இருப்பதாகவும் கவலை தெரிவித்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களை உலுக்கியது.
இந்நிலையில் அவரது மனைவி சுப்ரியா மேனன் தற்போது ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் "மிகவும் கடினமான இந்த சூழலில், மரணமும் கொடிய நோயும் பரவி வரும் வேளையில், இந்த இரட்டை வானவில் எனது கணவர் வருவதற்கு அடையாளமா?" என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.