கொரோனா காரணமாக 21 நாள் ஊரடங்கு - ஆனா ஒரு நல்ல விஷயமும் இருக்கு...காமெடி நடிகர் போட்ட ட்வீட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். நேற்றைய தினம் பேசிய பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா காரணமாக 21 நாள் ஊரடங்கில் இருக்கும் ஸ்பெஷாலிட்டி Tamil Comedy Actor Points A Speciality in the 21 days of corona lockdown

இதனை தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, டிக் டிக் டிக் போன்ற பல படங்களில், காமெடி வேடங்களில் நடித்திருக்கும் நடிகர் அர்ஜுனன். இவர் தந்து ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவு இட்டுள்ளார். "அட, இந்த 21 நாள் ஊரடங்கு தெலுங்கு வருடப்பிறப்பான இன்று (25.03.2020) ஆரம்பித்து வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று முடிய போகிறது. அனைவருக்கும் தெலுங்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார். இந்நிலையில் மக்கள் அனைவரும் உகாதி என்று அழைக்கப்படும் தெலுங்கு புத்தாண்டை வீட்டில் இருந்தபடியே கொண்டாடி வருகின்றனர்.

 

Entertainment sub editor

Tags : Arjunan, Corona