ஹோட்டல் இல்லை.. டெலிவரி இல்லை, அம்மா சமையல்தான்.! கதறும் குழந்தை.. விக்னேஷ் சிவன் செம வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட் வீடியோவை பதிவிட்டுள்ளார். 

விக்னேஷ் சிவன் பகிர்ந்த க்யூட் வீடியோ | vignesh shivan shares a cute video

உலகம் முழுவதும் தற்போது கரோனா வைரஸ் குறித்த அச்சம் பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவிலும் அது எதிரொலித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக பல்வேறு ஊர்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் யாரையும் அவசியமில்லாமல் வெளியில் வர வேண்டும் என போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் விக்னேஷ் சிவன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். ஒரு சின்னக்குழந்தை ஹோட்டல்கள் எதுவும் இல்லை என்பதாலும், டெலிவரி கொடுப்பவர்களும் இல்லை என்பதாலும் கதறி கதறி அழுகிறது. மேலும் இனி அம்மாவின் சமையல்தான் என சொல்வதை கேட்டு இன்னும் அழுகிறது. இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள அவர், பாவம் என பதிவிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Paavam ;( 😭😭😭😭😭

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on

Entertainment sub editor