ராகவா லாரன்ஸ் டிரஸ்ட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பா ? - அதிகாரப்பூர்வ தகவல் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சமூகத்தில் நலிவடைந்தோருக்கு தொடர்ந்து உதவி செய்து வருவதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் கூட கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்தார்.

21 Corona Positive cases at Raghava Lawarence's Trust | ராகவா லாரன்ஸ் ட்ரஸ்டை சேர்ந்த 21 பேருக்கு கொரோனா வைரஸ்

இந்நிலையில் சமீபத்தில் அவர் நடத்தி வரும் டிரஸ்ட்டை சார்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக சசெய்திகள் வெளியானது. இதுகுறித்து எங்கள் தரப்பு சார்பாக நாங்கள் விசாரித்த போது, 18 குழந்தைகளுக்கும், 3 பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

முதலில் அவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்களை பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் பாஸிட்டிவ் என்று தெரியவந்துள்ளது.

உடனடியாக அவர்கள் லயோலா கல்லூரி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் காரணமாக  காய்ச்சல் குறைந்து, அவர்களுக்கு உடலில் சராசரி வெப்பநிலை காணப்படுகிறதாம். மேலும் அனைவரும் ஆரோக்கியமாக உள்ளனராம்.

அவர்களுக்கு மேற்கொள்ளப்படும் தொடர் பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தால், அவர்கள் உடனடியாக டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். குழந்தைகள் விரைவில் பூரண குணமடைவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

21 Corona Positive cases at Raghava Lawarence's Trust | ராகவா லாரன்ஸ் ட்ரஸ்டை சேர்ந்த 21 பேருக்கு கொரோனா வைரஸ்

People looking for online information on Coronavirus, Covid 19, Raghava Lawrence will find this news story useful.