நடிகர் ரீயோ - ஸ்ருதி ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு..! ஆணா.. பொண்ணா.. கெஸ் பண்ணுங்க.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரியோ ராஜுக்கு குழந்தை பிறந்துள்ளதை அடுத்து, அதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரீயோவுக்கு குழந்தை பிறந்தது | vijay tv fame actor rio raj and sruthi blessed with a baby girl today

சின்னத்திரையில் ஆன்கராக கலக்கியவர் ரியோ ராஜ். இதுமட்டுமின்றி டிவி சீரியல்களிலும் நடித்து இவர் பிரபலமானார். இதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகன் அவதாரமெடுத்தார். இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. தற்போது இவர் பத்ரி இயக்கத்தில் ப்ளான் பண்ணி பண்ணனும் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ரியோ ராஜ் தனது இன்ஸ்டாகிராமில் சந்தோஷமாக விஷயம் ஒன்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், 'எனது உலகை ஆள இளவரசி வந்துவிட்டாள். எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம்' என அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Entertainment sub editor