"விஜய் சேதுபதி" என்ற பெயரில் வெளியாகவிருக்கும் மக்கள் செல்வனின் புதுப்படம் - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 05, 2019 09:43 AM
விஜயா புரொடக்ஷன் சார்பாக பி.பாரதி ரெட்டி தயாரிப்பில் விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் சங்கத் தமிழன். வாலு, ஸ்கெட்ச் படங்களின் இயக்குநர் விஜய் சந்தர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். விவேக் - மெர்வின் இந்த படத்துக்கு இசையமைக்க, வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
15ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பின் டைட்டிலாக ’விஜய் சேதுபதி’ என்று படத்தின் குழுவினர் அறிவித்துள்ளனர். இதனை அடுத்து விஜய் சேதுபதி படத்தின் டைட்டிலுடன் கூடிய புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.