''உயிர் போகும் வரை மறக்க மாட்டேன்'' - கமல் செய்த காரியாத்தால் ரசிகர் நெகிழ்ச்சி.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் கமல் செய்துள்ள காரியத்தால், அவரது ரசிகர் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

தமிழ் சினிவில் உலகநாயகன் என புகழப்படுபவர் கமல். 50 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாத்துறையில் இருந்து வரும் இவர் பல சாதனைகளை செய்துள்ளார். இவர் தற்போது இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் கமலின் ரசிகரான போகன் (வயது30) என்பவர், இடுப்புக்கு கீழே உள்ள பாகங்கள் செயலிழந்தவர் ஆவார். இவருக்கு கமலை சந்தித்து பேச வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இதையடுத்து இந்த விஷயம் கமல் காதுக்கு போக, அவர் தனது ரசிகருடன் சூம் கால் எனும் வீடியோ கால் வசதியில் பேசியுள்ளார். இதையடுத்து போகன், 'இது என் கனவு நிறைவேறிய தருணம், இதை நான் உயிர் போகும் வரை மறக்கமாட்டேன்'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
#MakkalNeedhiMaiam #KamalHaasan https://t.co/gpE5lUQrAn
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) April 7, 2020