''பிரபல ஹீரோவின் Most Wanted திரைப்படம்.. 120 கோடிக்கு சாட்டிலைட் உரிமை.?' - உண்மை நிலவரம் இதுதானாம்.!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல ஹீரோ படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப். யஷ் கதாநாயகனாக நடித்த இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் கே.ஜி.எஃப்-2 வின் சாட்டிலைட் உரிமை சுமார் 120 கோடிக்கு விற்கப்பட்டுள்ள்ளதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இதையடுத்து, நமது கோலிவுட் வட்டாரத்திடம் கேட்டபோது, 'சாட்டிலைட் உரிமை குறித்து வெளியான செய்தி எதுவும் உண்மையில்லை. அது ஆதரமற்ற ஒன்று. அதற்கான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஆரம்பமாகவில்லை' என திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர். இத்திரைப்படம் அக்டோபர் 23 அன்று வெளியாகவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.