கொரோனா 'நிதியாக' ரூபாய் 1 கோடி... 'சூப்பர்ஸ்டார்' நடிகர் அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. எனினும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் செல்கிறது. இதனால் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய அரசும் மாநில அரசும் 144 தடை உத்தரவை நாடு முழுவதும் பிறப்பித்துள்ளது.

ரூபாய் 1 கோடி வழங்கிய சூப்பர் ஸ்டார்|Super star actor mahesh babu donates 1 crore for corona

மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வரும் இந்த சூழ்நிலையில் அரசுக்கு உதவ தெலுங்கு நடிகர்கள் பலரும் முன்வந்திருக்கின்றனர். இன்று காலையில் நடிகர் பவன் கல்யாண் மத்திய அரசுக்கு ஒரு கோடி ருபாய் மற்றும் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு தலா 50 லட்சம் என மொத்தம் இரண்டு கோடி ரூபாய் நன்கொடையாக அளித்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு 1 கோடி ரூபாய் தருவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்“ அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் எனது நன்றி. எனது பங்களிப்பாக 1 கோடி ரூபாய் தருகிறேன். உதவ நினைப்பவர்கள் நன்கொடையாக முதலமைச்சர் நிதிக்கு வழங்கலாம்” என தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor