விஜய்யின் பிகில் வசனமே இவரை பற்றிதான்..! பாடகர் க்ரிஷ் செம ஜாலியாக சொல்வது என்ன.?!
முகப்பு > சினிமா செய்திகள்பாடகர் க்ரிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு க்யூட் பதிவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானவர் க்ரிஷ். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இவர் பாடியா மஞ்சள் வெளியில் மாலையிலே, ஜூன் போனால் உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. பாடல்கள் மட்டுமின்றி இவர் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார். மேலும் நடிகை சங்கீதாவை இவர் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு க்யூட் பதிவை வெளியிட்டுள்ளார். விஜய் நடித்த பிகில் படத்தில், ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் கண்டிப்பாக ஒரு ஆண் இருப்பான் என்று பேசும் காட்சியை பகிர்ந்து, ''அண்ணன் என்னை பத்திதான் சொன்னாரு'' என பதிவிட்டுள்ளார். தனது மனைவியின் வெற்றிக்கு பின்னாலும் இவர் இருப்பதை சொல்வது போன்ற இவரின் பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இவர் மீக நீண்ட காலமாகவே நடிகர் விஜய்யின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Annan enna patthidhaan sonnaaru...🙈 pic.twitter.com/2cuDStvWAg
— KRISH (@krishoffl) March 29, 2020