தனிமையில் இருந்து நம்மை காப்பாத்த மீண்டும் அவதரிக்கிறார் 'சக்திமான்' - எந்த சேனல்ல தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்90 கிட்ஸ்களின் மிகவும் விருப்பமான டிவி ஷோக்களில் சக்தி மான் மிக முக்கியமான ஒன்று. சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் என எத்தனை சூப்பர் ஹீரோக்கள் வந்தாலும், நமக்கு பரீட்சையமான முதல் சூப்பர் ஹீரோ சக்தி மான் தான்.

பிரச்சனைகளை கண்டவுடன் ஆபத்பாண்டவனாக மாறி உதவும் சக்திமானாக நாமும் மாற முயற்சிப்போம். சக்தி மான் உடையை அணிந்து கொண்டு அவரை மாதிரி நின்ற படியே சுற்றி வந்து சக்திமானாக மாற முயற்சித்திருப்போம்.
அப்படிப்பட்ட சக்திமான் நம்மை தனிமையில் அவதரிக்கிறாராம். இதுகுறித்து சக்திமானாக நடித்த முகேஷ் கண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில், 130 கோடி மக்களும் ஒன்றினைந்து தூர்தஷன் சேனலில் சக்திமான் பார்க்கத் தயாராகுங்கள். இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
130 crore Indians will together get the opportunity to watch Shaktiman on DD once again. Wait for the announcement. pic.twitter.com/MfhtvUZf5y
— Mukesh Khanna (@actmukeshkhanna) March 29, 2020