Super Deluxe All Banner USA
www.garudabazaar.com

டபுள் ட்விஸ்ட்டுடன் பயங்காட்டும் ‘தேவி 2’ டீசர் இதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவி 2’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Prabhu Deva Tamannaah starrer Devi 2 teaser is out

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘தேவி’ திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்தது. ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருந்த அந்த படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதைத் தொடர்ந்து இயக்குநர் விஜய், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘தேவி 2’ என்ற தலைப்பில் இயக்கியுள்ளார். இதில், முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருடன் இந்த பாகத்தில் நந்திதா ஸ்வேதா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிலிம்ஸ் சார்பில் ஐசரி கே கணேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் ஒரு பேய் இல்ல இரண்டு பேய் இருக்கு என கோவை சரளா கூறுவதில் இருந்து ரூபி என்ற பேயுடன் மற்றொரு பேய் இணைந்திருப்பதாக தெரிகிறது.

இப்படம் கோடை விடுமுறையையொட்டி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டபுள் ட்விஸ்ட்டுடன் பயங்காட்டும் ‘தேவி 2’ டீசர் இதோ..! வீடியோ