கைதி-க்கு பின் கார்த்தியின் அடுத்தப்படம் ஆரம்பம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.

Karthi-Rashmika Mandanna's Karthi 19 kicks starts with a pooja

சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கவிருக்கும் கார்த்தியின் 19வது திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.

எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படம், கார்த்தியின் ‘சிறுத்தை’, ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படங்களை போன்று குடும்பமாக ரசிகர்கள் பார்த்து ரசிக்கும்படி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக, தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ரஷ்மிகா மண்டன்னா நடிக்கவிருக்கிறார். விவேக்-மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வந்த லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளை முடித்த கார்த்தி தற்போது ‘கார்த்தி 19’ படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். சென்னையில் சில இடங்களில் செட் அமைக்கப்பட்டு அதிக பொருட் செலவில் இப்படம் உருவாகி வருகிறது.