எனக்கு மட்டும் சொல்லுங்கள் ப்ளீஸ்... பிறந்தாள் சர்ப்ரைஸ் குறித்து ஹீரோவிடம் கேட்ட ராஷ்மிகா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்த 'கீதா கோவிந்தம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  இந்த படத்தில் இடம் பெற்ற இன்கேம் இன்கேம்... பாடல் மிகப்பெரிய ஹிட்டாகியது.

Rashmika Mandanna asks secret with Vijay Devarakonda from Dear Comrade team

அதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து 'டியர் காம்ரேட்' என்ற படத்தில் நடித்துவருகின்றனர். இந்த படம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, பரத் கம்மா இயக்கிவருகிறார்.

இந்த படத்தின் நாயகி ராஷ்மிகாவுக்கு நாளை பிறந்தநாள் என்பதால் ஸ்பெஷல் அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக விஜய் தேவரகொண்டா தெரிவித்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் தேவரகொண்டா தெரிவித்திருப்பதாவது,  நாளை காலை 9 மணிக்கு ராஷ்மிகாவின் பிறந்த நாள் ஸ்பெஷல். பிறந்த நாள் வாழ்த்துகள் லில்லி என பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள ராஷ்மிகா, நான் மட்டுமாவது தெரிந்து கொள்கிறேன். மற்றவர்களுக்கு அது சர்ப்ரைஸாக இருக்கட்டும். எனக்கு மட்டும் சொல்லுங்கள் ப்ளீஸ் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டுள்ளார்.