மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக, நித்யா மேனனை வைத்து பிரியதர்ஷினியும், கங்கனா ரனாவத்தை வைத்து விஜய்யும் இயக்குவதாக அறிவித்தனர்.

அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி, ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்கிறார். இவர் ஜெயம் மூவிஸ் என்ற பெயரில் பல படங்களை தயாரித்திருக்கிறார்.
இவர் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு 'சசி லலிதா' என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து இயக்கவிருக்கிறார்.
இந்த படத்தில் ஜெயலலிதா சிறுவயதில் எப்படி இருந்தார்? எப்படி நடிகையாக ஆனார் ? அரசியலில் அடியெடுத்து வைத்து, அதிமுகவில் அவரது பங்களிப்பு, சசிகலாவின் வாழ்க்கை அவருடன் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட தொடர்பு என்று மக்கள் அறியாத பல விஷயங்களையும் உள்ளடக்கிய கதையாக இந்த படம் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜெகதீஸ்வர ரெட்டி தெரிவித்தார்.