இந்த புதிய படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகும் 'பேட்ட' நடிகை !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அர்ஜூன் ரெட்டி', 'கீதா கோவிந்தம்' படங்களின் மூலம் ஆந்திரா தாண்டி தமிழ்நாட்டிலும் ரசிகர்களை கொண்டவர் விஜய் தேவரகொண்டா. கடந்த வருடம் இவரது நடிப்பில் நேரடி தமிழ்படமாக 'நோட்டா' வெளியாகியிருந்தது.

Petta Actress Malavika Mohanan joins with Vijay Devarakonda

இந்நிலையில் இவர் தற்போது 'காக்கா முட்டை' படத்தின் வசனகர்த்தா ஆனந்த் அண்ணாமலை இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.  விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகவிருக்கும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா பைக்கராக நடிக்கவிருக்கிறாராம்.  ஹீரோ என தலைப்பு வைக்கப்பட்ட இந்த  படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறதாம். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக 'பேட்ட' படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் நடிக்கவிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகவிருப்பதாக கூறப்படும் இந்த படத்தில் பிரபல நட்சத்திரங்கள் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்படவிருக்கிறது.