தல அஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் ஆகஸ்ட்.10ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் ஆகஸ்ட்.10ம் தேதி சனிக்கிழமையில் ரிலீசாகவுள்ளதாக பிஆரோ சுரேஷ் சந்திரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் இணையும் அஜித்-யுவன் கூட்டணியில் உருவகாவிருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ஆல்பம் மற்றும் பின்னணி இசை மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் ‘தல 60’ திரைப்படத்திலும் அஜித் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தின் பணிகள் ஜூலை 2019-ல் தொடங்கி திரைப்படம் வரும் ஏப்ரல்.10 - 2020ல் ரிலீசாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்டகாசமாக அடுத்த ஹிட்டுக்கு ரெடியான தல அஜித்- ரிலீஸ் தேதி அறிவிப்பு வீடியோ