நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா 38’ திரைப்படத்தின் இசையை கேட்டு மெய் சிலிர்த்து போனதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா 38’ திரைப்படத்திற்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் இசை குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே Behindwoods தளத்திடம் அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருந்தார். சூர்யா-38 ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே ஜி.வி.பிரகாஷ் இசையை முடித்துவிட்டார்.
இதுவரை தன் இசையில் இல்லாத ஒரு விஷயம் இந்த படத்தில் அமைந்திருக்கிறது. இது தாறுமாறான கூட்டணியாக இருக்கும் என ஜி.வி.பிரகாஷ் கூறியிருந்தார். இந்நிலையில், நடிகர் சூர்யா ‘சூர்யா-38’ இசையை கேட்டு மெய் சிலிர்த்துப்போனதாக ஜி.வி.பிரகஷுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்துள்ள ட்வீட்டில், ஜி.வி ப்ரோ சிறந்த படைப்பு. மெய் சிலிர்த்துப்போனேன். சூப்பர் மேஜிக் என தன் கைப்பட எழுதிய கடிதத்துடன் பூங்கொத்து ஒன்றை ஜி.வி.பிரகாஷுக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து, சூர்யா-ஜி.வி.பிரகாஷ் கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
Thanks a lot @Suriya_offl sir for the lovely flowers and ur hand written note ... means a lot ... this album will be special for our whole team #suriya38 #GV70 #sudhakongra @2D_ENTPVTLTD @rajsekarpandian pic.twitter.com/dKzlugk3My
— G.V.Prakash Kumar (@gvprakash) March 28, 2019