நடிகர் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள ‘என்.ஜி.கே’ என்கிற ‘நந்த கோபாலன் குமார்’ திரைப்படம் வரும் மே.31ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டீசர் கடந்த (பிப்.14) அன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை குவித்தது.
அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘என்.ஜி.கே’ ரிலீசுக்காக நீண்ட நாட்களாக காத்திருந்த சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடையும் விதமாக தற்போது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அனல் பறக்கும் அரசியல் களத்தில் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
#NGK releasing on May 31st #NGKfromMay31@Suriya_offl @selvaraghavan @thisisysr pic.twitter.com/qVZMxSvvtR
— DreamWarriorPictures (@DreamWarriorpic) March 25, 2019
வேற லெவல் வெறித்தனத்திற்கு காத்திருக்கும் சூர்யா ரசிகர்கள்- ரிலீஸ் தேதி அறிவிப்பு வீடியோ