ஸ்டைலிஷ் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் அல்லு அர்ஜூன். இவரது படங்களுக்கு தெலுங்கு மட்டுமல்லாமல், தமிழ் மற்றும் மலையாளத்திலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இவர் தற்போது பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் 'ஐகான்' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இன்று அல்லு அர்ஜூனின் பிறந்தநாள் என்பதால் நடிகை ராஷ்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில் அவரை வாழ்த்தி ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், அல்லு அர்ஜூன் சார், பிறந்தநாள் வாழ்த்துகள்.திரையுலகில் எனக்கு தொடர்ந்து ஆதரவளித்துக் கொண்டிருப்பதற்கு நன்றி.
விரைவில் உங்களுடன் பணிபுரிவது குறித்து ஆவலுடன் இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இயக்குநர் சுகுமார் - அல்லு அர்ஜூன் கூட்டணி ஏற்கனவே ஆர்யா, ஆர்யா 2 போன்ற வெற்றி படங்களை வழங்கியிருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
@alluarjun sir.. happiest birthday to you sir. Thankyou for always supporting us so much. And I am So excited to be working with you soon sir. 😁😁
— Rashmika Mandanna (@iamRashmika) April 8, 2019