நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது. 25 பாராளுமன்ற தொகுதி மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதில் தெலுங்குதேசம் கட்சிக்கும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், ஜன சேனா கட்சி சார்பாக நடிகர் பவன் கல்யாண், காஜீவாக்கா மற்றும் பீமாவரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் ஆகியோருடன் சேர்ந்து கூட்டணி அமைத்து சட்டப்பேரவை, மக்களவை இரண்டிலும் போட்டியிடுகிறது. சமீபத்தில், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இணைந்த அவரது சகோதரர் நாகேந்திர பாபு
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன், அரசியலில் களமிறங்கும் நடிகர்கள் பவன் கல்யாண் மற்றும் நாகேந்திர பாபுவின் அரசியல் பயணத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், தேர்தல் பிரச்சாரங்களில் கலந்துக் கொள்ள முடியாவிட்டாலும், எங்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு. தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்றும். பவன் கல்யாணுக்கும், அவரது ஜனசேனா கட்சிக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.
பவன் கல்யாணின் தனித்துவமான தலைமையும், புத்திசாலிதனமான பார்வையும், ஆந்திர மக்களின் வாழ்வில் நிச்சயம் ஒளியூட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனது வாழ்த்துக்கள் என்றும் உங்களுடன்’ என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
WE ARE WITH YOU pic.twitter.com/P5FvBv7Ls2
— Allu Arjun (@alluarjun) April 5, 2019