இதனால் தான் தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் படம் கைவிடப்பட்டதா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் மகேஷ் பாபு . இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கபடுகிறார்.  இவரது நடிப்பில் கடைசியாக பரத் அனே நேனு என்ற படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்க கைரா அத்வானி, பிரகாஷ் ராஜ்  ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

Reason Behind Mahesh Babu - sukumar movie dropped

இதனை அடுத்து இவர் அடுத்ததாக மைதிலி பிலிம்ஸ் சார்பில் ஒரு படத்தில் நடித்துவந்தார். இந்த படத்தை ஆர்யா, ஆர்யா 2, ரங்கஸ்தலம் ஆகிய படங்களின் இயக்குநர் சுகுமார் இயக்கி வந்தார்.  இது மகேஷ்பாபுவின் 26வது படமாகும்.

இந்நிலையில் இந்த படம் டிராப் ஆனதாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மகேஷ்  பாபு,  கருத்து வேறுபாடு காரணமாக இயக்குநர் சுகுமாரின் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் கைவிடப்படுகிறது.

அவரது புதிய படத்துக்கு எனது வாழ்த்துகள். மிகச் சிறந்த இயக்குநரான அவரின் மீது எப்போதும் மரியாதை இருக்கும். '1 நேனொக்கடினே' எப்போதும் ஒரு அற்புத படைப்பாக இருக்கும். அந்தப் படத்தில் உழைத்த ஒவ்வொரு தருணத்தையும் ரசித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.