சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள ‘காஞ்சனா 3’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
![Raghava Lawrence Kanchana 3 Trailer has been released Raghava Lawrence Kanchana 3 Trailer has been released](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-16/images/raghava-lawrence-kanchana-3-trailer-has-been-released-photos-pictures-stills.jpg)
ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் காமெடி கலந்த ஜாலியான பேய் படமாக வெளியாகி தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கிய திரைப்படம் ‘காஞ்சனா சீரிஸ்’. ‘முனி’, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து பெரும் வெற்றியடைந்தது.
அதன் வரிசையில் தற்போது உருவாகி வரும் ‘காஞ்சனா 3’ திரைப்படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் ஏப்.19ம் தேதி ரிலீசாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. விறுவிறுப்பான திகில் காட்சிகளுடன், விடபுள் மாஸ் வசனங்கள் என ஹாரர்-காமெடியில் உருவாகியுள்ள ‘காஞ்சனா 3’ திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
டபுள் மாஸ் கிளப்பும் ‘காஞ்சனா 3’ டிரைலர் இதோ..! வீடியோ