பேய் படத்தில் நண்பன் செண்டிமெண்ட்- லாரன்ஸின் புதிய சிங்கிள் டிராக் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள ‘காஞ்சனா 3’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

First single track from Raghava Lawrence's Kanchana 3 is out now

ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் காமெடி கலந்த ஜாலியான பேய் படமாக வெளியாகி தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கிய திரைப்படம் ‘காஞ்சனா சீரிஸ்’. ‘முனி’, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து பெரும் வெற்றியடைந்தது.

அதன் வரிசையில் தற்போது உருவாகி வரும் ‘காஞ்சனா 3’ திரைப்படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் ஏப்.19ம் தேதி ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘நண்பனுக்கு கோயில கட்டு’ பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. டூ-பா-டூ இசையமைத்துள்ள இப்பாடலை ‘சாரவெடி’ சரண் எழுதி பாடியுள்ளார்.

பேய் படத்தில் நண்பன் செண்டிமெண்ட் இருக்கும்படியாக உருவாகியுள்ள இப்பாடலுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பேய் படத்தில் நண்பன் செண்டிமெண்ட்- லாரன்ஸின் புதிய சிங்கிள் டிராக் இதோ வீடியோ